search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டர் தடுப்பு சட்டம்"

    குமரி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலத்தை அடுத்த கணபதிபுரம் தெற்கூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). இவர் மீது சுசீந்திரம், கருங்கல் போலீஸ் நிலையங்கள் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் வெள்ளி சந்தை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஜெயிலில் இருக்கும் அரவிந்த் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

    அதன்பின்பு அவர் சுசீந்திரம் பகுதியில் வின்சென்ட் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    எனவே அவரை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதனை கலெக்டர் ஏற்றுக்கொண்டு, தற்போது ஜெயிலில் இருக்கும் அரவிந்தை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் இருந்த அரவிந்த் பாளை. ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    குமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 63 பேர் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையில் தொடர்புடைய கீழசரக்கல்விளையை சேர்ந்த பிரதீப் (வயது 22). இளங்கடை பகுதியை சேர்ந்த மனோ என்ற உஷ்மான் (30), கோட்டார்கம்பளம் தெருவை சேர்ந்த ரமேஷ் (20) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    மேலும் இதேபோன்று மற்றொரு கொலை முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த 11 மாதங்களில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
    குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தலை மறைவு குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை கைது செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தலை மறைவு குற்றவாளிகளை பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தனிப்படைகள் அமைத்து இருந்தார். அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல தலைமறைவு குற்றவாளிகளை தனிப்படையினர் கண்காணித்து தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று பூதப்பாண்டி, திருவட்டார், மணவாளக்குறிச்சி, அருமனை ஆகிய பகுதிகளில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தனர்.

    பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி ஒருவரை கைது செய்தனர். திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வரும், அருமனை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2 தலைமறைவு குற்றவாளிகளையும், மண வாளக்குறிச்சி பகுதியில் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    தொடர்ந்து தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வாகன விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி முதல் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    மோட்டார் வாகன விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், இருசக்கரவாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 21,068 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 18,982 பேர் மீதும், கார்களில் இருக்கை பெல்ட் அணியாமல் சென்ற 6,715 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவை உள்பட மோட்டார் வாகன விதிமீறல் குற்றங்களுக்காக மொத்தம் 65 ஆயிரத்து 774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இதுதவிர மணல் கடத்தல் தொடர்பாக 478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 663 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த தகவலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

    குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என்று ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    புதுச்சேரியை சேர்ந்த செந்தில் என்கிற ரமேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காலாப்பேட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்யக்கோரி அவரது மனைவி பத்மாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, ஆர்.ராமதிலகம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சமூகவிரோதிகளை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த சட்டத்தை பிரயோகிக்கும்போது அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

    குண்டர் தடுப்புச்சட்டத்தில் இருந்து தனது கணவரை விடுவிக்கக்கோரி மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை அரசு அதிகாரிகள் முறையாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்காமல், அறிவுரைக்குழுமத்திடம் தான் முறையிட வேண்டும் எனக்கூறி தங்களது கடமையை தட்டிக்கழித்துள்ளனர்.

    அறிவுரைக்குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், அரசிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே சில வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், அதிகாரிகள் இதை முறையாக பின்பற்றவில்லை.

    எனவே, மனுதாரரின் கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டம் ரத்துசெய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும்போது சமூகவிரோதிகள் எளிதில் தப்பிக்காமல் இருக்க சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiHighCourt
    அதிகாரிகளை மிரட்டி ஆடியோ வெளியிட்ட பெரியகுளம் ரவுடி ‘புல்லட்‘ நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். #BulletNagarajan
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்‘ நாகராஜன் (வயது 53). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ் அப்‘பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.

    மேலும், பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீசாரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.



    இந்நிலையில் பெரியகுளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜன் கடந்த 10-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் இடுப்பில் வைத்திருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையில் துப்பாக்கிகள், பத்திரிகையாளர், வக்கீல் பெயரில் போலி அடையாள அட்டைகள், நீதிபதியின் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், சார்பு நீதிபதி என்ற வாசகத்துடன் கூடிய அட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து வேலூர் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ‘புல்லட்’ நாகராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  #BulletNagarajan 
    விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே பிரபல ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே உள்ள வி.புதூர்கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 38). ரவுடியான இவர் மீது வளவனூர் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அடி, தடி தகராறு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த சில வாரத்துக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மகேசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் மகேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மகேசை வளவனூர் போலீசார் கைது செய்தனர்.
    ×